அதிக மின்சாரம் தரும் புதிய தாது “'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்'
புதைபடிவ எரிபொருட்களால் புவியில் மாசுபாடு அதிகரிக்கிறது. அதற்கு மாற்றாகவே சூரிய ஒளி மின்சாரம் முன்மொழியப்படுகிறது.
சூரிய ஒளித் தகடுகள் பெரும்பாலும் சிலிக்கானால் தான் செய்யப்படுகின்றன. சில இடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக பெரோவ்ஸ்க்கைட் ( Perouskite )எனும் தாதுப்பொருளும் பயன்படுகிறது. இதில் கால்சியம், டைடானியம் ஆக்ஸைட் ஆகியவை இருக்கும்.
இந்தத் தாதுவின் விலையும் கனமும் குறைவானது. அதிக வளையும் தன்மை கொண்டது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இது சுலபமாக உடைந்துவிடும். சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்தால் பலவீனமாகி விடும். சீனாவில் உள்ள ஜீஜியாங் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் தாதுவில் சிறிய மாற்றம் செய்து, ஒரு புது வகையை உரு வாக்கியுள்ளனர்.இதன் பெயர் 'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்' இதில் ஒழுங்கற்ற கரிமப் படலங்களும், ஒழுங்கான கரிமமற்ற படலங்களும் உள்ளன.இதனால் வெயில், மழையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுகின் றன. 1000 மணி நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும் இவற்றின் மின்சாரம் தயாரிக்கும்திறன் குறைய வில்லை. விரைவில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply